என் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் எதிலும் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்….!

398

பீட்டர்பால் மகன்….

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்ததில் இருந்தே சர்ச்சையாக இருக்கிறது. பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும், அவரை இரண்டு முறை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்ததாகவும் ஹெலன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து வீடியோ வெளியிட்ட வனிதாவோ பீட்டருக்கு குடிப்பழக்கமே கிடையாது, எங்கள் திருமணத்தின்போது கூட அவர் ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றார். இந்நிலையில் பீட்டர் பாலின் மகன் ஒரு வெப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். கல்லூரியில் படித்து வரும் அவர் தன் தந்தை பற்றி கூறியிருப்பதாவது,

என் அப்பாவுக்கு குடிப்பழக்கமே இல்லை என்று வனிதா சொல்வதில் உண்மை இல்லை. என் தந்தையை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த பிறகு அம்மா, தங்கை, நான் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டோம். என் அப்பா மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். சுவர் ஏறிக் குதிக்க முயன்றபோது அவருக்கு காயம்ஏற்பட்டது.