என் வீடியோவை பார்த்துவிட்டு 1 கோடிக்கு அழைக்கிறார்கள் : அதிர்ந்துபோன நடிகை!!

463

அதிர்ந்துபோன நடிகை

நடிகைகள் சினிமாவில் தான் வெறும் கவர்ச்சிக்காக பயன்படும் பொருள் போல காட்டுகிறார்கள் என்றால், மறுபுறம் நடிகைகள் என்றால் விபச்சாரம் செய்பவர்கள் என்ற ஒரு எண்ணமும் பலரிடம் உள்ளது. அப்படி பலரிடம் உள்ள மனநிலை பற்றி நடிகை சாக்ஷி சவுத்ரி கோபமாக பேசியுள்ளார்.

சமீபத்தில் சமுக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் விடியோவை வெளியிட்டாராம். அதை பார்த்துவிட்டு ஒருவர் படுக்கையை பகிர்ந்தால் 2 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.

ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக கூறி கூட அழைக்கிறார்கள். நான் விற்பனைக்கு அல்ல என்று அவர்களுக்கு பதில் கூறிவிட்டேன் என சாக்ஷி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரை படுக்கைக்கு அழைத்து இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒருவர் கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி அருண், “உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி பதிலடி கொடுத்தார். வாலிபரின் பதிவை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டார். அது வைரலானது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை சாக்‌ஷி சவுத்ரிக்கும் இதுபோல் ஆபாச அழைப்பு வந்துள்ளது. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் அவருக்கு மோசமான வார்த்தைகளுடன் பாலியல் அழைப்புகள் வருகின்றன. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக ஆபாச அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல” என்று கூறியுள்ளார்.