எவ்வளவு தைரியம் இருந்தா என் மகனை காதலிப்ப? மிரட்டிய தாயால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

712

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதலனின் தாய் மிரட்டியதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்து.

நெல்லூரை சேர்ந்தவர் மஸ்தன். இவர் மகள் வல்லிப்பு மமதா (16) மாணவியாவார். மமதா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்தார் மமதா. வீட்டில் மமதா தனியாக இருந்த நிலையில், அவர் காதலித்த இளைஞரின் தாய் அங்கு வந்துள்ளார்.

பின்னர் எவ்வளவு தைரியம் இருந்தால் என் மகனை காதலிப்பாய் என மமதாவை மிரட்டியுள்ளார். இதையடுத்து மனமுடைந்த மமதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.