ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது ஹோப் விண்கலம்… விண்வெளியில் ஐக்கிய அரபு அமீரகம் புதிய சாதனை!!

309

ஐக்கிய அரபு………..

ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவு திட்டமான ஹோப் ப்ரோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சாதனை படைத்து உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ஹோப் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் 7 மாத தொடர் பயணத்திற்கு பின் செவ்வாய் கிரக புவி வட்ட பாதையை நேற்று ஹோப் விண்கலம் அடைந்தது. இதனை அறிந்த விஞ்ஞானிகள் மற்றும் அரச குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஐரோப்பாவை தொடர்ந்து 5-வது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்து உள்ளது.