பியா..

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்ல போறோம் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பியா பாஜ்பாய். இந்த படத்தை தொடர்ந்து ‘கோவா’, ‘கோ’, ‘அபியும் அனுவும்’ போன்ற சில தமிழ் படங்களில் பியா நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் தெரிந்த முக நடிகையாக மாறினார்.

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கோவா படம்தான் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கிராமத்தில் இருந்து அம்மன் நகைகளை திருடி செல்லும் இளைஞர்கள் கோவாவில் தங்குவதும், ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை.

இந்த படத்தில் பியா பாஜ்பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்த அவர், பட்டனை கழற்றி, உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

