ஐஸ்வர்யா தனது அம்மாவை பற்றி கூறியவை எல்லாம் பொய்யா? அவர் வாய்யாலயே மாட்டி கொண்டார்

620

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா . இவர் இதற்குமுன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமே அவர் கவனிக்கப்படும் நபரானார்.

இதற்கெல்லாம் முக்கிய காரணமாக அமைந்தது, அவர் ஏற்றிருந்த சர்வதிகாரி டாஸ்க் தான். இந்த டாஸ்க்கை வைத்து பலரையும் கொடுமைப்படுத்தினார். குறிப்பாக பாலாஜி மீது குப்பை கொட்டியது. இந்த செயலுக்கு ஐஸ்வர்யா சொல்லும் காரணம் பாலாஜி என் அம்மாவை பற்றி தவறாக பேசினார் என்பதாகும்.

ஆனால் தனது அம்மாவை பற்றி ஐஸ்வர்யாவே பொய்யான தகவல்களை கூறியுள்ளார். அதாவது ஒரு மிட்நைட் மசாலாவில் டேனியிடம் அவர், தனக்கு அம்மாவே இல்லை, அவர் இறந்துவிட்டார் என்றார்.

ஆனால் ஹார்ட்டின் டெடிக்கேட் செய்யும் டாஸ்க்கில், ‘இந்த ஹார்ட்டை என் அம்மாவுக்கு டேடிக்கேட் செய்றேன், அவர்களை நான் பார்த்து 8,9 மாதங்கள் ஆயிடுச்சி, உங்களுக்கு உடம்பு சரியில்லைனு எனக்கு தெரியும்மா’ என்று கூறியிருந்தார். இதில் எது உண்மை என தெரியவில்லை. இதற்கெல்லாம் ஒரு குறும்படம் போட்டால் தான் உண்மை வெளிச்சதுக்கு வரும்.