ஐஸ்வர்யா ராயை கெடுப்பேன் என்று சொன்னது ஏன்? ராதாரவி ஷாக் விளக்கம்!!

1974

ராதாரவி ஷாக் விளக்கம்

ராதாரவி சமீபத்தில் நயன்தாரா விஷயத்தில் கடும் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார், இருந்தாலும் இனி இவர் இப்படியெல்லாம் பேசவே கூடாது என பலரும் கோஷமிட்டு வருகின்றனர்.

நடிகர் சங்கமும் இதற்கு விரைவில் முடிவு எடுக்கும் என கூறப்படுகின்றது, இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ‘எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் நான் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்’ என்று ராதாரவி கூறினார்.

அதுக்குறித்து சமீபத்தில் கேட்ட போது ‘அட நான் அப்படி குறிப்பிட்டது அவருக்கு தான் பெருமை, அதாவது அவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்பதை குறிப்பிட்டேன்’ என அவர் கொடுத்த விளக்கம் அனைவருக்குமே ஷாக் தான்.