ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை!!

749

அமர்ந்திருப்பது…

ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான ஆண்களும் 94 வீதமான பெண்களும் இறப்பதற்கான ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கடமையாற்றுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும்,

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பின்னரும் ஒரு முறை நடக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்களும் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது மற்றும் அமர்ந்திருப்பது என்பவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.