4 இளம்பெண்களை துஸ்பிரயோகம்

20 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வர்ஜீனியாவில் உள்ள நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 357 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஜூட் லோவிக், ஒரு மோசமான பாலியல் குற்றவாளி என அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவி கத்ரின் லொவிக் பொலிசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும் ஜூட் 1990களில் 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதனையடுத்து அவருடைய முன்னாள் கணவரை கைது செய்த பொலிஸார், டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளும் போது, வடக்கு வர்ஜீனியாவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 4 இளம்பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குடன் ஒத்துப்போவதை பார்த்துள்ளனர்.

1995ம் ஆண்டு சம்பவம் நடைபெற்ற அன்று இரவு, முகமூடி அணிந்துகொண்டு அபார்ட்மெண்டிற்குள் நுழைந்த ஜூட், துப்பாக்கி முனையில் 4 பெண்களையும் கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு தப்பினார்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 357 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 1990 களின் முற்பகுதியிலும், 1990 களின் பிற்பகுதியிலும் ஃபேர்ஃபாக்ஸ் மற்றும் பிரின்ஸ் வில்லியம் கவுண்டிஸில் நடைபெற்ற 17 பாலியல் குற்றங்களில் ஜூட்டிற்கு தொடர்பு இருக்கிறதா எபிட்ரா கோணத்திலும் பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.