ஒரே ஊரைச் சேர்ந்த தோழிகள்… குட்டையில் குளித்தபோது விபரீதம் : சோகத்தால் மூழ்கிய கிராமம்!!

1289

நாமக்கல்…..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதி சேர்ந்தவர் கணேசன் மகள் ஜனனி (14) 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ 8 ம் வகுப்பு படித்து வந்தார்.

இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் அத்திப்பலகானூர் அருகே உள்ள குட்டையில் வீட்டிற்கு தெரியாமல் 2 மாணவிகளும் குளிக்க சென்றுள்ளனர். அங்கு சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.

மேலும் அப்பகுதியில் நாய் ஒன்று நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் கரையின் மேலே துப்பட்டா உள்ளதை கண்டு உள்ளே யாரோ மூழ்கி உள்ளதை அறிந்ததால் ஊர் பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் மூழ்கிய மாணவிகளின் சடலத்தை ஊர் பொதுமக்கள் மீட்டெடுத்தனர்.

சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் சுகவனன் விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு மாணவிகளின் உடலையும் மீட்ட காவல்துறையினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஒரே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.