பீகாரில் குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகளை கற்பழித்து ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்திலேயே புதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவன் ஒன்று கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது.
கடந்த திங்கள்கிழமை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 7 வயது முதல் 17 வயது வரையிலான உங்கள் சகோதரிகள், பிள்ளைகள் என காப்பகத்துக்கு நன்கொடை அளிப்பவர்களால் பல மாதங்களாக பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டு வருவதை நினைத்து பாருங்கள் என டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இதனையடுத்து காப்பகத்திற்கு வந்து பொலிசார் விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது இளம்பெண் ஒருவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார், அதில் இதுவரை 40க்கும் மேற்பட்ட சிறுமிகளை கற்பழித்துள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கொலை செய்து காப்பக வளாகத்திலே புதைத்தும் உள்ளனர்.
இதனால் பொலிசார் தற்போது காப்பகத்தின் சுற்றுச்சுவரை இடித்தும், தோண்டியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.