ஒரே நாளில்…. ஒரு சில மணிநேரங்களில் மரணத்தில் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

615

மரணத்தில் இணைந்த தம்பதி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனைவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து கணவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சண்முகம் (56) என்பவரது மனைவி பாலாமணி(55). இன்று பாலாமணி தனது தாய் மாராத்தாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த கார் மீது இவர்களது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பாலாமணி உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த பாலாமணியின் கணவர் சண்முகம், தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் அப்படியே உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதியினர் இறப்பிலும் ஒன்று சேர்ந்துள்ளனர்.