ஒரே பதிலால் தமிழ் படம் சிவாவை ஓடவிட்ட இளையராஜா- செம்ம சுவாரஸய நிகழ்வு

629

இளையராஜா இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

ஒருநாள் இளையராஜாவை தமிழ் படம் சிவா பேட்டி எடுத்தாராம், அப்போது அவரிடம் ‘நீங்கள் ஆன்மிகம் பற்றி நிறைய பேசுகிறீர்கள், இந்த உலகம் எப்படி சென்றால் நல்லது?’ என்று கேட்டாராம்.

அதற்கு இளையராஜா ‘உன் வேலை கேள்வி கேட்பது, என் வேலை பதில் சொல்வது, நாம் இருவரும் இந்த நேரத்தில் இந்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவனவன் வேலையை அவனவன் செய்தாலே இந்த உலகம் நன்றாக இருக்கும்’ என்று கூறினாராம்.

இதை கேட்ட சிவா அந்த இடத்திலிருந்து நிகழ்ச்சி முடிந்ததும் ஓடியே விட்டாராம், இதை பியார் பிரேமா காதல் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.