ஓரு வாரத்தில் மூன்று கொலைகள்!

928

கல்கரியில் இரு வெவ்வேறு இடங்களில் மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மூன்று உடல்களையும் கண்டு பிடித்ததன் பின்னர் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இக்கொலைகள் சம்பந்தமாக டஸ்ரின் டுத்தி 25 மீது மூன்று கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்டவர்கள் குற்றவாளியின் காதலி, தாய் மற்றும் சித்தப்பா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொன்டோ தொடர் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் உடலும் இரண்டாவது இடத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.டுத்தி தற்கொலை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒருவர் யூலை 25லும் மற்றய இருவரும் யூலை 31 அன்றும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.மூவரும் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்பதை வெளியிடவில்லை.குற்றவாளி கல்கரி றொக்கி வியு பொது வைத்தியசாலையில் தற்கொலை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.