அறந்தாங்கி நிஷா
கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்துவருகிறார் கொமடி நடிகை அறந்தாங்கி நிஷா.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியதில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல கொமடி நடிகை அறந்தாங்கி நிஷா களத்துக்கே சென்று மக்களுக்கு உணவுகளை கொடுத்து பசியை போக்கி வருகிறார். அவர் கூறுகையில், இப்போது தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உதவிபண்ணிட்டு இருக்கேன். அங்கே உள்ள மக்களுக்கு இப்ப வரைக்கும் எந்த உதவிகளுமே கிடைக்கல.
நாலு நாளைக்கு மேலே ஆச்சு. இரண்டு நாள் பட்டினியா இருந்துருக்காங்க. இப்பவும் சாப்பாட்டுக்கு கை ஏந்தி உதவி கேட்கும் நிலை தான். அவங்க எல்லோருமே விவசாயம் செஞ்சி, பலரோட பசியைப் போக்கினவங்க. இன்னைக்கு அவங்க பசியால தவிக்கிறாங்க. குழந்தைக்குத் தாய்ப்பால்கூடக் கொடுக்க முடியாம இருக்காங்க.
இப்போ சென்னை மாதிரி நகரம்னா அவங்களுடைய கஷ்டம் வெளியில் தெரியும். ஆனா, யாருக்கும் தெரியாம ஒரு கிராமத்துக்குள்ளே இருக்குற இவங்களுடைய கஷ்டம் யாருக்குமே தெரியாது. அவங்களுடைய கஷ்டத்தை மீடியா தான் வெளிக்கொண்டு வரணும். அதனால தான் நான் எல்லா கிராமங்களுக்கும் போய் வருகிறேன் என கூறியுள்ளார்.