ரஷ்யா உருவாக்கியுள்ள மிதக்கும் அணு ஆலையை இன்று கடலில் இறக்கியுள்ளது.Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் அணு ஆலை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கப்பல்தளத்தில் இருந்து கடலில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கப்பல் தளம் பால்டிக் கடலில் இருந்து நார்வே முதல் மர்மான்ஸ்க் வரை இழுத்துச்செல்லப்பட்டு அணு உலைகளில் எரிபொருள் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த Akademik Lomonosov எனும் மிதக்கும் அணு ஆலை வரும் 2019ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான துறைமுக நகரம் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அணு சக்தி வழங்கவே இந்த மிதக்கும் அணு ஆலை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த மிதக்கும் அணு ஆலைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அவர்கள் இதை ஒரு மிதக்கும் Chernobyl என்று அழைத்து வருகின்றனர்.
உக்ரைனில் இருந்த அணு மின் நிலையம் விபத்துக்குள்ளாகி 1986ம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் மிதக்கும் Chernobyl என்று Akademik Lomonosov அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.