கட்டப்பஞ்சாயத்து… கூலிப்படை : அம்ருதாவின் தந்தை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

1156

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மாமனார் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசத்தையே உலுக்கிய சாதிவெறி படுகொலைச் சம்பவத்தை அடுத்து அம்ருதாவின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரனாய் கொலை சம்பவத்தை அடுத்து அதிர்ச்சியில் இருந்து மீளாத அம்ருதா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர், தமது காதல் கணவரின் சடலத்தைப் பார்த்து கதறியபடியே மயக்கமிட்டு விழுந்துள்ளார்.

பிரனாயின் சகோதரர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருவதால் அவர் நாடு திரும்பும் வரை இறுதிச்சடங்குகளை தள்ளி வைத்துள்ளனர்.

அம்ருதாவின் தந்தை மாருதி ராவு நிலம் வாங்கி விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

மட்டுமின்றி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அரசியல் செல்வாக்கு மிகுந்த மாருதி ராவு தனியாக கூலிப்படை ஒன்றையும் தமது பாதுகாப்பிற்கு வைத்துள்ளார்.

பெரும்பாலும் வடமாநில நபர்களை கொண்ட அந்த கூலிப்படை கும்பல் நிலம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து செயல்களில் இவரால் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசு நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியும் வந்துள்ளார்.

வெறும் மளிகைக் கடை ஒன்றில் இருந்து துவங்கிய மாருதி ராவின் வாழ்க்கை தற்போது அரசியல்வாதிகளை உருவாக்கும் கிங் மேக்கர் என பெயரெடுக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது மருமகனின் கொலையில் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தாலும் காவல்துறை இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.