கணவனுக்கு பக்கத்து ஊரில் வேலை : அடுத்தவர் மனைவியை அடைவதற்கு முதலாளி செய்த அதிர்ச்சி செயல்!!

570

தமிழகத்தில் கணவனுக்கு பக்கத்து ஊரில் வேலை கொடுத்துவிட்டு, அவரின் மனைவியை அடைய நினைத்த முதலாளியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் காஜல். 19 வயதான இவர் அர்ஷத் மன்சூர் என்பவரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி, அவருடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையத்தில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இந்த நிறுவனத்தை நடத்தி வந்த ஜாவித் என்பவருக்கு காஜல் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் காஜலை அடைய வேண்டும் என்பதற்காக, அர்ஷத் மன்சூருக்கு பக்கத்து ஊரில் வேலை கொடுத்து விட்டு நிறுவனத்தில் தனியாக இருந்த காஜலிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் காஜல் அதற்கு மறுத்ததால், உடனே ஜாவித் தன்னுடைய ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, ஜாவித் தன்னிடம் வேலை பார்த்து வந்த இரண்டு பேரின் உதவியுடன், காஜலிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த காஜல் உடனடியாக அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக ஜாவித் அருகில் இருந்த கல்லை எடுத்து வீச, அது காஜல் மீது விழுந்துள்ளது.

இருப்பினும் இரத்தம் வழிந்த நிலையில் காஜல் ஓடிய போது, வெளியூரில் வேலைக்கு சென்ற கணவன் அர்ஷ்த் தனது மனைவியை பார்த்துவிட, துரத்தி வந்த ஜாவித்துடன் வேலைப்பார்ப்பவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காஜல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவத்தை அறிந்த இது குறித்து விசாரணை கொண்டுள்ளனர்.

நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணைக்கு பின் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் ஜாவித் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது ஜாவித், தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் அவரது நண்பர்கள் தான் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார். இருப்பினும் இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.