கணவனை இழந்து தனிமையில் இருந்த ஆசிரியை செயற்பாட்டால் அரங்கேறிய கொடூரம்!!

1246

கர்நாடக….

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு நகரில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சுலோச்சனா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை சுலோச்சனாவின் கணவர் இறந்துவிட்டார்,

இந்நிலையில் சுலோச்சனா தனிமையில் இருந்து வந்தார், பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே வீடு வாடகை எடுத்து தங்கி வந்தார். இந்நிலையல் இப்பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரின் கணவர் முருகேஷ் என்பவருடன் ஆசிரியை சுலோச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

முருகேஷ் மைசூரு கண்டேஸ்வரர் கோவிலில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியை சுலோக்சனாவும் முருகேசனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி காயத்ரிக்கு தெரியவந்தது, அப்போது ஆசிரியை நேரில் சந்தித்த காயத்திரி இனிமேல் தனது கணவருடன் பழக வேண்டாம் என்றும், மீறி பழகினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஆனால் ஆசிரியை சுலோச்சனா அதை பொருட்படுத்தவில்லை, இந்நிலையில் சுலச்சனாவை காயத்ரி தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

ஆசிரியை சுலோச்சனா நஞ்சனகூடுவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரின் வீட்டிற்கு மூன்று பேருடன் வந்த காயத்ரி தனிமையில் இருந்த ஆசிரியையை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இந்த கொலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரங்கேறியது, இந்த கொலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதில் தொடர்புடைய நஞ்சனகூடு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய குற்றவாளி காயத்ரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.