ஹைதராபாத்……
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஹைதர்குடாவைச் சேர்ந்தவர் நாகலதா ரெட்டி, இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் திடீரென சுதீர் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, இதனால் கணவரை விட்டு பிரிந்த அந்தப் பெண் காதலன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார், சுதீர் அந்த பெண்ணுடன் ஆசை தீர உல்லாசம் அனுபவித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிடம் இருந்த நகை பணம் அனைத்தையும் தீர்ந்தது, பின்னர் நாளடைவில் சுதீர் அந்தப்பெண்ணை விட்டு விலக ஆரம்பித்தார், இதனால் அதிர்ச்சி அடைந்தப் பெண் அதுகுறித்து சுதீருடன் கேட்டார்,
அப்போது பணத்திற்காக மட்டுமே சுதீர் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்ததை தெரிந்தது, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், கட்டி கணவனை பரிதவிக்க விட்டு பள்ளத்தில் மாட்டிக் கொண்டதை உணர்ந்து கலங்கினார்.
தான் கள்ளக்காதலனால் மோசடி செய்யப்பட்டதை அந்தப் பெண்ணால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, இதனால் கதறி கதறி அழுதார்.
காதலனால் ஏமாற்றப்பட்ட தால் மனமுடைந்த அந்த பெண் தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அறையை சோதனையிட்டதில் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது, அதில் சுதீர் என்ற நபர் தன்னை காசுக்காகவும், காமத்திற்காக ஏமாற்றி உடலுறவு அனுபவித்து வந்ததாகவும், தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதால் மனம் தாங்காமல் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்தார். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.