கணவன்மார்கள் உஷார் : மனைவியை விலைமாது என திட்டும் கனவனை கொலை செய்தால் அது கொலை இல்லையாம்!!

730

கணவன்மார்கள் உஷார்

மனைவியை விலைமாது என திட்டும் கணவரை அவரின் மனைவி கொலை செய்தால் அது கொலை அல்ல என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2002ம் ஆண்டு தனது கணவரை ஒரு பெண் எரித்துக்கொன்ற வழக்கில் அவரும், அவரின் கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது. எனவே, என்னையும், என் மகளையும் என் கணவர் விலைமகள் என திட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் அவரை கொலை செய்தேன். அவர் கூறிய வார்த்தையே எனக்கு அவரை கொலை செய்ய தூண்டியது. எனவே, அதிகபட்ச தண்டனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “எந்த பெண்ணும் தன் கணவர் தன்னை இப்படி ஒரு வார்த்தையை கூறி திட்டுவதை விரும்ப மாட்டார். கணவர் கூறிய வார்த்தையே கொலை செய்யும் அளவுக்கு மனைவியை தூண்டியுள்ளது. கோபத்தினால் நடந்துள்ளது.

எனவே, இது கொலையாக கருத முடியாது. மரணம் விளைவிக்கக் கூடிய குற்றமாகவே கருத முடியும்” என உத்தரவிட்ட நீதிபதிகள் அப்பெண்ணின் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தனர்.