கணவன் போல் நம்பி சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பொலிசாரிடம் கொடுத்த மரணவாக்குமூலம்!!

1176

பெண்ணிற்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய நிலையில், அவரை தீ வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை, கொரட்டூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவி (39). இவருக்கு சங்கர் என்ற கணவனும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சங்கர் இறந்துவிட்டதால் தேவிக்கு வேப்பேரியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தங்கராஜ் ஏற்கனவே திருமணவனர், அவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுடன் நான்கு பிள்ளைகளும் வாழ்ந்து வந்துள்ளனர்.

அதில் தேவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. வீட்டில் ஒன்றாக கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தாலும், இருவரு, சம்பாதிக்கும் பணத்தை அவர், அவர்கள் வைத்துக் கொண்டுள்ளனர்.

அதன் காரணமாக குடியிருந்த வீட்டிற்கு 6 மாதங்களாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு குடித்துவிட்டு வந்த தங்கராஜிடம், தேவி மீண்டும் வாடகை பணம் குறித்து கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.

அப்போது இருவருக்கும் பிரச்சனை முற்றிப் போகவே, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி, போதையில் இருந்த தங்கராஜ் நீ என்ன தற்கொலை செய்து கொள்வது நானே தீ வைக்கிறேன் என்று தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

தேவியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த அவர், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் மருத்துவமனையில் இருந்த தேவியிடம் விசாரித்த போது அவர் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், எனக்கும் தங்கராஜுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, தங்கராஜை மிரட்டுவதற்காகத் தீக்குளிப்பதாகக் கூறினேன். ஆனால், நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் மண்ணெண்ணெய் கேனை என்னிடமிருந்து பிடுங்கி, என் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டார்.

அவரை சும்மாவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட தங்கராஜ் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.