இந்தியாவில் தம்பியுடன் சேர்ந்து கணவரையும், மாமனாரையும் கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் சிய ராம் (65). இவர் மகன் வினோத் (25) திருமணமான வினோத் தனது மனைவி பூஜா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சிய ராமும், வினோத்தும் தங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள முட்புதரில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர்டலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து பூஜாவிடம் விசாரித்தனர்.
முதலில் திருடர்கள் தன்னுடயை கணவர் மற்றும் மாமனாரை கொலை செய்திருக்கலாம் என பூஜா கூறினார்.ஆனால் அவர் பேச்சில் சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் இருவரையும் கொன்றதை ஒப்பு கொண்டார்.
பூஜா அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் என் உறவுக்கார இளைஞர் அஜய் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.இதை என் கணவர் கண்டுப்பிடித்த நிலையில் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன்னர் நான் அஜயுடன் போனில் பேசுவதை பார்த்த சியராமும், வினோத்தும் என்னை கண்டித்ததோடு அடித்து உதைத்தனர்.இதையடுத்து என் தம்பி கிம்பலுடன் சேர்ந்து இருவரையும் கொல்ல முடிவெடுத்தேன்.
அதன்படி வீட்டில் தனியாக இருந்த மாமனார் சியராமை தோசை கல்லால் அடித்து பின்னர் கழுத்தை நெரித்து கொன்றோம்.
பின்னர் வீட்டுக்கு போதையில் வந்த வினோத் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு இரு சடலங்களையும் முட்புதரில் போட்டோம் என கூறியுள்ளார்.இதையடுத்து பூஜாவையும், கிம்பலையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.