கணவர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்… மனைவியே அடித்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்!!

361

சென்னை…

சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த தனலட்சுமி. நேற்று இரவு கையில் வெட்டுக் காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

மருத்துவமனை ஊழியர் தகவலின்பேரில் போலீசார் விசாரணை செய்த போது தனக்கும் தனது கணவரான ஆனந்தகுமார்(40) என்பவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது தனது கணவர் தன்னை தாக்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அரும்பாக்கம் போலீசார் இன்று காலை தனலட்சுமியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டிக்கிடந்துள்ளது.

சந்தேகம் வரவே போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனலட்சுமியின் கணவர் ஆனந்தகுமார் தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு தடயவியல் துறையினர் வந்து தடயங்களை சேகரித்தனர். அரும்பாக்கம் போலீசார் ஆனந்தகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார் ஆனந்தகுமார் மர்ம மரணம் குறித்து அவரது வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆனந்தகுமார் மரணத்தில் திடிர் திருப்பமாக ஆனந்தகுமாரின் மனைவி தனலட்சுமியே அவரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆனந்தகுமாரின் மனைவியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தனலட்சுமி மீது சந்தேகம் கொண்ட ஆனந்தகுமார் தினமும் மது குடித்து வந்து அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் ஆனந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு ஆனந்தகுமார் மதுகுடித்து வந்து சந்தேகம் கொண்டு அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் இரும்பு ராடைக் கொண்டு தலை மற்றும் உடம்பில் அடித்து கொன்று கேபிள் டி.வி கேபிளால் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.

அதன் பின்பு தான் வழக்கை திசை திருப்புவதற்காக மருத்துவமனை சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் பதற்றத்தில் வீட்டின் வெளிப்பக்கமாக பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு சென்றதால் தான் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றிரவு ஆனந்தகுமாருக்கும் தனலட்சுமிக்கும் சண்டை எழுந்த போது இவர்களது வீட்டுக்கு சில ஆண் நபர்கள் சென்று வந்ததது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

வந்த சென்ற நபர்கள் யார்? அவர்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.