கணவர் வேலைக்கு சென்ற பின்னர் இளம் மனைவி செய்து வந்த மோசமான செயல் : நடந்த விபரீத சம்பவம்!!

1609

நடந்த விபரீத சம்பவம்

விவாகரத்து கேட்டு பிரிந்து சென்ற மனைவியிடம் சேர்ந்து வாழலாம் என அழைத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா. காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை கடைக்கு பால்வாங்கச் சென்ற கங்காவை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய பொலிசார், கங்காவின் கணவர் ராஜசேகரிடம், கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்று விசாரித்தனர்.

அப்போது மனைவி கங்காவின் நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் அவர்களில் யாராவது இந்த செயலை செய்திருக்காலாம் என்றும் சொன்னதால் ராஜசேகர் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் கங்காவை கொன்றதை ஒப்பு கொண்டார். மேலும், திருமணத்துக்கு பின்னர் கங்கா சில ஆண்களுடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கங்காவை பிரிந்து சென்ற ராஜசேகர் தனியாக வசித்து வந்துள்ளார்.

அதன் பிறகு கங்கா மேலும் பல ஆண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது ராஜசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில், மனைவியை சந்தித்து சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார்.

தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி கணவருடன் சேர்ந்து வாழ கங்காவும் சம்மதித்துள்ளார். இருந்தாலும் கணவர் வேலைக்கு சென்றுவிட்ட பின்னர் தனது ஆண் நண்பர்களுடன் கங்கா நெருங்கிப் பழகி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, கங்காவின் செல்போனைப் பறித்து ராஜசேகர் உடைத்துப் போட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கங்கா காலையில் பால் வாங்க தனியாக செல்லும் தகவலை கூட்டாளிகளுக்குத் தெரிவித்து, தீர்த்து கட்ட திட்டம் வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, கங்கா பால் வாங்க செல்லும் போது இரண்டு நாட்கள் ஒத்திகை பார்த்த கொலையாளிகள், திட்டமிட்டபடி வியாழக்கிழமை கங்காவை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராஜசேகரை பொலிசார் கைது செய்த நிலையில் அவரின் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.