கனடா…….
கனடாவின் ரொரோன்றோவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்பு போட்டியில் இலங்கை வைத்தியர் பங்குப்பற்றியுள்ளார்.
பல நாடுகள் முன்வைத்த புதிய கண்டுபிடிப்புக்களை பின்தள்ளி இலங்கை வைத்தியர் கண்டுபிடித்த பொருள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ரொரோன்றோ சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் மேம்பட்ட திறன் சங்கம் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டிக்காக இலங்கையில் இருந்து தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரிஸ்னி சகாப் என்றபவரினால் முன்வைக்கப்பட்ட தொண்டை, காது, மூக்கினை பரிசோதிக்கும் விசேட உபகரணத்திற்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் நோயாளியை தொடாமல், அவசியம் ஏற்பட்டால் இரண்டு அறைகளில் இருந்தும் நோயாளியை பரிசோதிக்க முடியும்.
உலக சுகாதார அமைப்பும் இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் அவதானத்தை செலுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் அல்ட்ராசொனிக் தொழில்நுட்பம் மூலம் எந்த வெட்டு காயங்களுமின்றி தொண்டையின் உள் பகுதியில் சத்திர சிகிச்சை ஒன்று இலங்கையில் முதல் முறையான மேற்கொண்ட பெருமையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.