கருணாநிதிக்காக வானில் திடீரென தோன்றிய அதிசய நிகழ்வு: வைரலாகும் புகைப்படம்!!

482

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மூன்று ஒளிவட்டங்களுடன் சூரியன் அஞ்சலி செலுத்திய அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

தஞ்சையில் பொதுமக்கள் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது காலை, 11:15 மணி முதல், 12:15 மணி வரை சூரியன் பளிச்சென ஒளி வீசியது.

இதனால், வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில், சூரியனை சுற்றி மூன்று வண்ணங்களில் திடீர் ஒளிவட்டம் தோன்றியது. இதன் அளவு, வட்ட வடிவமாக காணப்பட்டது.

இச்செய்தி, காட்டுத் தீ போல பரவியது. இதனால் அந்த பகுதி மக்கள் ஒளிவட்டத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.’கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தவே, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியுள்ளது என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.