மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை தொய்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது உடல் நிலை சீராகி மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் எனக்கு கருணாநிதி தாத்தாவை மிகவும் பிடிக்கும், உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் அழுகை வந்தது, உங்களுக்காக பிரார்த்தானை செய்தேன், நான் மட்டுமின்றி இங்கு எல்லோரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
என் அம்மா நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று சொன்னார், அதை கேட்ட பின்பு தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, தற்போது நான் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.