கர்ப்பிணி மனைவியை படிக்க அனுப்பிய கணவர்… திரும்பி வந்து மனைவி கொடுத்த அதிர்ச்சி! திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்..!

342

மனைவி கொடுத்த அதிர்ச்சி…

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படிக்க அனுப்பி நிலையில், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சரஸ்வதி என்ற பெண்ணை 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் பிரதாப். திருமணத்திற்கு பின்பு மனைவி ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.

இதனால் கர்ப்பிணியாக இருந்த மனைவியை காரைக்குடியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். இதனையடுத்து விடுமுறைக்கு கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தனது கர்ப்பம் கலைந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த வேதனையில் கடந்த 5ம் தேதி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் எலி மருந்தை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.