தமிழகத்தில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த பிரித்தி என்ற மாணவி 600க்கும் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கோயம்புத்தூரின் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு, இவரது மனைவி புவனேஸ்வரி, கூலித் தொழிலாளியான இவருக்கு பிரித்தி என்ற மகள் இருக்கிறார்.
சிறு வயதிலேயே எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வந்த பிரித்தி படிப்பில் படுசுட்டி. இவர்கள் ஊரிலேயே உள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார், பிரித்தியால் நடக்க முடியாது என்பதால் புவனேஸ்வரி அழைத்து சென்று வருவது வழக்கம்.
தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று சாதித்த பிரித்தி, +1 படிக்க விரும்பினார்.
ஆனால் மேல்நிலைப்பள்ளி என்பதால் தலைமை ஆசிரியரின் உதவியுடன் சிறப்பு அனுமதி பெற்று வணிக கணிதம் பிரிவில் சேர்ந்து படித்தார்.
இந்தாண்டு வெற்றிகரமாக +1 தேர்வையும் எழுதி, மதிப்பெண்களுக்காக காத்திருந்த பிரித்தி கடந்த 18ம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரித்தியின் மறையால் பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான போது, பிரித்தி 600க்கு 471 மதிப்பெண் பெற்றது தெரியவந்துள்ளது.
அவர் தமிழில் 93, ஆங்கிலம்- 54, பொருளாதாரம்-68, வணிக கணிதம்- 74, வணிகவியல்-88 அக்கவுண்டன்சி -94 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.