கழுத்தறுக்கப்பட்டதற்கு காரணம் என்ன? திடுக்கிடும் தகவலை வெளியிட்டார் பாதிக்கப்பட்ட மாணவி!

666

கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவி லாவண்யாவை அவரது காதலன் நவீன்குமார் வழிமறித்து லாவண்யாவின் கழுத்தை கொடூரமாக அறுத்தது காதலி மேல் இருந்த சந்தேகத்தால் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாவண்யா தற்போது நலமாக இருக்கிறார். காதலியின் கழுத்தை அறுத்த நவீன்குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடூரமாக கழுத்து அழுக்கப்பட்ட லாவண்யா, எழுவருடமாக காதலித்துவிட்டு கடைசியாக 20 நாள்களாகக் காதலனிடம் பேசாமலிருக்கக் காரணம் என்ன? காதலியைக் கொடூரமாக கழுத்தை அறுக்கும் அளவுக்கு நவீன்குமாருக்கு அப்படி என்ன கோபம் என விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்கள் வெளியாகியுள்ளது.

காவல் துறையினரிடம் லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தில், “புராஜெக்ட் சம்பந்தமாக ஏப்ரல் 10ஆம் தேதி எனது தோழிகள் உட்பட ஏழு பேர் சென்னை சென்றோம். அங்கு எங்களது வேலை முடிந்த பிறகு நவீன்குமாரோடு மெரினா கடற்கரைக்கு சென்றோம்.

அப்போது தாங்கள் ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் எனது கைப்பேசிக்கு ஒரு காலிற்கு பதில் அளித்துவிட்டு வைத்துவிட்டு மீண்டும் நாங்கள் எங்களது எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது சிறிது நேரம் கழித்து நவீன் ‘30 விநாடி பேசிட்டு உடனே கட் பண்ணிட்டியே…. போன்ல யாரு’ எனக் கேட்டு நவீன் சந்தேகப்படும் அளவில் பேச ஆரம்பித்துள்ளார். ‘நாம் இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் இவ்வாறு என்னை சந்தேகப்பட்டு பேசலாமா என்று கோபத்தில் அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்ட லாவண்யா தோழிகளுடன் சிதம்பரம் வந்துள்ளார்.

பின்பு காலேஜுக்கு வந்ததிலிருந்து நவீன்குமார் போன் பண்ணிக்கொண்டே இருந்ததாகவும், நானும் கொஞ்சம் வேலை இருந்ததால் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை என்று கூறியுள்ளார். கடைசியாக நேற்று முன்தினம் காலேஜ் முன்பு வந்த நவீன் இவ்வாறு செய்துவிட்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று நானும் கொஞ்சம் கூட நினைத்துக் கூட பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.ஏழு வருடம் காதலித்து இப்படி காதலி மீது சந்தேகப்பட்டு இப்படி கொலை செய்யும் அளவிற்கு இறங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.