சேலம்….

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருக்கு திருமணமாகி கஜேந்திரன், பூமிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இதனிடையே அவரது மனைவி பார்வதி மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கணவன் மனைவி இருவரும் நாழிக்கல்பட்டியில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது கோவில் அருகில் உள்ள கரடு பகுதிக்கு வந்தபோது, பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, இறந்தநிலையில் அழகிய பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பூபதி இறந்து பிறந்த குழந்தையை கோவில் பின்புறம் உள்ள காட்டில் குழி தொண்டி புதைத்துள்ளார். இதனைதொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது மனைவியும் அங்கேயே உயிரிழந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த பூபதி செய்வதறியாது அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து அவ்வழியே சென்ற ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்.

தாய், சேயின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், பூபதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.