காதலன் அனுப்பிய பெண்ணின் புகைப்படம்… காதலி எடுத்த விபரீத முடிவு!!

1478

சென்னை…..

சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஏஞ்சல். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனுஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இருவீட்டரும் சம்மத தெரிவித்ததுடன், திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து காதலன் தனுஷ் நேற்றைய தினம் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை ஏஞ்சலுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏஞ்சல் செல்போனில் தனுசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஏஞ்சலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது ஏஞ்சல் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், காதலன் தனுஷை யாரும் தாக்க வேண்டாம் என்றும் கூறியிருப்பது தெரிய வந்தது. செல்போன் ஆதாரங்களைக் கொண்டு தனுஷை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.