சென்னை கோயம்பேட்டியில் காதலியைக் கிண்டல் செய்த காரணத்தால் நண்பனையே 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம், கோயம்பேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் கணேஷ் என்பவர் தனது நண்பன் ரமேஷின் (17) காதலியை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து காதலி தனது காதலனிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் கோபம் கொண்ட கணேஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் சென்று மது அருந்தியுள்ளனர்.
பின்னர், வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேஷை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கணேஷ் விழுந்துவிடவே, கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு, விபத்தில் இறந்துவிட்டதாக பொலிசில் தெரிவித்துள்ளார் ரமேஷ்.
ஆனால், பிரேத பரிசோதனையில் கணேஷ் கொலைசெய்யப்பட்டதாக தெரியவரவே, 17 வயது சிறுவன் ரமேஷை கைது செய்துள்ளனர்.17 வயது சிறுவனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கீழ்ப்பாக்கம் கெல்லீஸிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.