காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: பெண் குடிக்கும் தண்ணீரில் சிறுநீரை கலந்த நபரின் அதிர்ச்சி செயல்

771

அமெரிக்காவில் உடன் பணிபுரியும் பெண் ஊழியர் காதலிக்க மறுத்ததால் அவர் குடித்த தண்ணீரில் சிறுநீரை கலந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்ரடோ பெரீஸ் என்பவர் அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் நிலையில், உடன் பணிபுரியும் பெண் ஊழியரை காதலித்து வந்துள்ளார்.ஆனால் கன்ரடோவுடன் நட்போடு இருக்கவே விரும்பிய அப்பெண் காதலை ஏற்கவில்லை.

இதனால் கோபமடைந்த கன்ரடோ, அந்த பெண் குடிக்கும் தண்ணீரில் தனது சிறுநீரை கலந்து கொடுத்துள்ளார்.தண்ணீரை குடித்த பெண் அதில் சிறுநீர் கலந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் கன்ரடோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு முதலில் 90 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ஒருநாள் மட்டும் சிறை தண்டனை அனுபவித்த கன்ரடோவின் நன்னடத்தையை ஒரு ஆண்டுக்கு சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.