காதலித்த பெண்ணை ராக்கி கட்ட வற்புறுத்திய ஆசிரியர்கள் : மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

990

இந்தியாவில் தான் காதலித்த பெண்ணை ராக்கி கட்ட ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை முயன்றதில் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர் திலீப்குமார் ஷா. இவர் அதே பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விடயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்த நிலையில், இதுகுறித்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் திலீப் மற்றும் குறித்த மாணவியை அழைத்துள்ளனர். பின்னர், மாணவியை திலீப்பின் கையில் ராக்கி கயிறு கட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதனால், மாணவர் திலீப்குமார் விரக்தி அடைந்து பள்ளி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். பின்னர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவனின் பெற்றோர் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.