காதலியை தனியாக அழைத்து நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் : காதலனின் வெறிச்செயல்!!

718

காதலனின் வெறிச்செயல்

தமிழகத்தில் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை காதலிப்பதாக அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்த இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே பேட்டை பகுதியில் வசித்து வந்த இளம்பெண், அங்கிருக்கும் கம்ப்யூட்டர் செண்டர் ஒன்றில் படித்து வந்துள்ளார். இவருக்கும், மேலசெவல் அருகே வாணியங்குளத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற ஜேசிபி ஆபரேட்டருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் பேஸ்புக்கில் பேச ஆரம்பித்த இவர்கள், அதன் பின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு, வாட்ஸ் ஆப்பில் பேசி வந்துள்ளனர். சுமார் 6 மாத காலமாக இவர்கள் நட்பு சென்ற நிலையில், கடந்த வியாழக்கிழமை காலையில், கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்ற அந்த பெண், வீடு திரும்பாததால், பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் பொலிசாருக்கு நாங்குநேரி அருகே சின்னமூலைக்கரைப்பட்டி காட்டுப் பகுதியில், இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் அங்கு சென்று பார்த்த போது காணாமல் போனதாக கூறப்பட்ட அந்த பெண்ணின் சடலம் இருந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சுந்தர், அங்கு தமது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.

தங்களை பொலிசில் சிக்க வைத்துவிடுவார் என்ற அச்சத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செயதுவிட்டு தப்பியுள்ளான்.

இதையடுத்து, இளம்பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், சுந்தரையும், அவனது நண்பர்களையும் தேடி வருகின்றனர்