காதல் கொடுக்கும் தேவதை கதைகள் : திருமண நாளில் மனம் திறந்த நடிகை பாவனா!!

1540

நடிகை பாவனா

நடிகை பாவனா நேற்று முன்தினம் தனது முதல் வருட திருமண நாளை கொண்டாடிய நிலையில், தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா. இவர் தனது முதல் கன்னட படத்தை தயாரித்த நவீன் என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, தற்போது 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று தனது முதல் வருட திருமண நாளை கொண்டாடும் பாவனா, திருமண புகைப்படத்துடன் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. மகிழ்ச்சியான திருமண நாள். எப்போதாவது ஒரு முறை, சாதாரண வாழ்க்கையின் நடுவே சுவாரஸ்யமான தேவதை கதையைக் காதல் எங்களுக்கு கொடுக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.