காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை சம்பவத்தில் மேலும் வெளியான அதிர்ச்சி தகவல்!!

1256

தூத்துக்குடி….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் ரேஸ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28).

வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜ்க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜ்க்கும், ரேஸ்மாவுக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.