காவிரி ஆற்றில் கல்லூரி மாணவியின் சடலம்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி : தீவிரமாகும் போலீஸ் விசாரணை!!

761

தருமபுரி….

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இன்று காலை மீனவர் ஒருவர் மணல்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெண் சடலம் ஒன்று மிதந்தது. அவர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதிமுக ரெண்டாக உடைந்துவிடக் கூடாது… இபிஎஸ்ஸை எச்சரித்த ஓபிஎஸ்!
விசாரணையில் தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகள் பிரியங்கா (22) என தெரிய வந்தது. இவர் அரசு கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் இவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதும் தெரியவந்தது.

தொடர்ந்து பிரியங்காவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பெண்ணாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? வீட்டு பிரச்சினையா? கல்லூரியில் ஏதேனும் தொந்தரவை சந்தித்தாரா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.