கீர்த்தி சுரேஷை தாறுமாறாக கலாய்த்துள்ள தமிழ்படம் 2! புகைப்படம் உள்ளே..

646

தற்போது இணையத்திலும் சரி, இளசுகளின் மனதிலும் சரி நீங்காத இடத்தை பிடித்த விடயம் என்றால் அது தமிழ்படம் இரண்டாம் பாகம் தான்.இதுவரை வந்த தமிழ் சினிமாவை மொத்தமாக வைத்து கலாய்த்து தள்ளியுள்ளனர்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2′. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த ரிசல்டை பாகுபலி படத்தில் வரும் காட்சியை பயன்படுத்தி போஸ்டர் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமிழ் படம் 2 ரிலீஸ் எப்பொழுது என்று மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது தமிழ் படம் 2 ரிலீஸை அறிவிக்க வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகையர் திலகம் கெட்டப்பில் இருந்த கீர்த்தி சுரேஷை கலாய்த்துள்ளனர்.