டிக்கெட் விலை………..

நிஜ உலகில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு சினிமா படத்தை தற்போது எடுக்க துவங்கியுள்ளனர்.
நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது, ஏர்டெகான் நிறுவனத்தை உருவாக்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இது.

இந்தப் படத்தை பார்த்த கோபிநாத் நடிகர் சூர்யாவையும், இயக்குநர் சுதா கொங்கராவையும் பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏர்டெக்கான் விமான டிக்கெட் விலை தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

அதனைத்தொடர்ந்து, மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைந்து தனது மதிப்பை இழந்து தற்போது டெக்கான் நிறுவனமாக மீண்டும் பறந்து கொண்டிருக்கிறார்.
வடமாநிலங்களில் 34 க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை கோபிநாத் இயக்கிவருகிறார். அதில் பயணிக்கும் டிக்கெட்டின் விலை அதிகபட்சமாக 2500 ரூபாய் ஆக உள்ளது.

மேலும், இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் படத்தில் ஒரு ரூபாய் தான் டிக்கெட் என்று கூறினீர்கள், தற்பொழுது 2500 ரூபாய் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.