கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்!!

998

வங்கதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் பெண் பத்திரிக்கையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தில் இருக்கும் ராதாநகரில் தன்னுடைய 9 வயது மகளுடன் வசித்தது வருபவர் சுபர்ணா (32). இவர் ஆனந்தா டிவி என்கின்ற தனியார் செய்தி நிறுவனத்துக்கும், ஜக்ரோதா பங்களா என்கின்ற செய்தி தாளுக்கும் வேலை பார்த்து வருகிறார்.

தன்னுடைய கணவரிடம் இருந்து சமீபத்தில் தான் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 10 முதல் 15 பேர் சுபர்ணாவின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். உடனே வீட்டின் கதவை சுபர்ணா திறந்த வேகத்தில், கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த நபர்கள் கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கியபடி சுபர்ணா சுருண்டு விழுந்தார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டார்கள் உடனடியாக சுபர்ணாவை, மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சுபர்ணா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.