கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட சிறுமி… கண்கலங்க வைக்கும் காரணம்!

676

குஜராத்தில் சிறுமி ஒருவர் கள்ளத் தொடர்பில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் சிறுமி கையைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பகவதிபரா பகுதியைச் சேர்ந்தவர், ராகுல் பர்மர். இவரது மனைவி, சுமன். ராகுல் பர்மர் வீட்டருகே 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியுடன் ராகுல் தகாத உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி சுமன் சந்தேகப்பட்டார்.

சமீபத்தில் தன் வீட்டுக்கு அந்த சிறுமியை சுமன் வரவழைத்தார். அப்போது கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் கை விட்டு ராகுலுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என நிரூபிக்கும்படி சுமன் கூறினார். சிறுமியின் கையை வலுக்கட்டாயமாக இழுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் மகளை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.