கர்நாடகா…….

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் குறித்து பல வதந்திகள் எழுந்திருப்பதால்,மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் நடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருக்கையில் அமருகிறார். அங்கு இருக்கும் செவிலியர், ஊசியை உள்ளே செலுத்தாமல் அவர் அருகில் வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

பின்னர் ஊசியை போட்டுக் கொண்டது போல ஒரு நடிப்பு நடித்து விட்டு, அந்த அதிகாரி அங்கிருந்து செல்கிறார்.
அடுத்து வரும் சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே செல்லும் இந்த அதிகாரிகளின் வீடியோ, தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், க டு மை யான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி போடுவது போல் நடித்த காட்சி !
முட்டாள்களின் ஆட்சிக்கு இந்த கொடுமையெல்லாம் சாட்சி!!
பாவம்டா இந்த அப்பாவி மக்கள்!! pic.twitter.com/sdRwUSvTki
— திராவிடன் துரை (@DravidianDurai) January 21, 2021