கோழிக்கறி சாப்பிட்ட பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

909

ஐஸ்லாந்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பெண் ஒருவர் வேகாத கோழிக்கறியை சாப்பிட்டதால் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் Harpenden பகுதியை சேர்ந்த Natalie Rawnsley (37) என்ற பெண் தன்னுடைய கணவர் Stewart மற்றும் அவருடைய இரண்டு மகன்களுடன் இணைந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதியன்று ஐஸ்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அங்கு Corfu பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேரம் Natalie கோழிக்கறி உட்கொண்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலையிலே திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து அவரது கணவர் Stewart கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் மூன்று உணவகங்கள் இருந்தன. அங்கு நானும் எனது மகன்கள் இருவரும், பாஸ்தா, ரொட்டி மற்றும் சான்டவிஜ் சாப்பிட்டோம். அதேசமயம் என்னுடைய மனைவி கோழிக்கறிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார்.

அப்பொழுது அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த உணவில் ரத்தம் அப்படியே உறைந்திருந்தது. அதில் அதில் நன்கு வேகவைத்த பகுதியை மட்டும் உட்கொண்ட பின்னர் இரவு உறங்க சென்று விட்டோம்.

அங்கு திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ரத்தம் உறைந்த நிலையில் உரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.