சம்மந்தியை கொ ன்று புதைத்து செடி வைத்த தாய், மகள் : திருமண அழைப்பிதழ் கொடுத்த சம்பவத்தில் புதிய திருப்பம்!!

695

புதிய திருப்பம்..

தமிழகத்தில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதியை கொ ன்று பு தைத்த வழக்கில் கைதான பெண் தனது சம்மந்தியையும் கொ லை செய்து வீட்டில் புதைத்த அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவருடைய மனைவி வசந்தாமணி (42). கணவன்- மனைவி இருவரும் தங்களது மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் செல்வராஜ் தனது அக்காள் கண்ணம்மாள் (54) வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க மனைவியுடன் சென்றார்.

ஏற்கனவே கண்ணம்மாளுக்கும், செல்வராஜூக்கும் இடையே சொத்து த கராறு இருந்த நிலையில் செல்வராஜ் மற்றும் அவர் மனைவி வசந்தாமணியை கண்ணம்மாள் தனது மருமகன் நாகேந்திரன் உதவியுடன் கொ ன்று வீட்டு பின்புறம் புதைத்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் கண்ணம்மாள் தனது மகள் பூங்கொடியுடன் சேர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் மருமகன் நாகேந்திரனின் தாய் ராஜாமணியை கொ லை செய்தது தற்போது தெரியவந்ததுள்ளது.

அதாவது நாகேந்திரன், பூங்கொடியை காதல் திருமணம் செய்தது அவரது தாய் ராஜாமணிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மருமகள் பூங்கொடியை ராஜாமணி கொ டுமைப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் போ தைக்கு அடிமையான காதல் கணவன் நாகேந்திரன் போ தை மறுவாழ்வு சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட, தனது மாமியாரை தாய் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றார் பூங்கொடி.

அங்கு வைத்து மாமியார் ராஜாமணிக்கு மயக்க மருந்து கொடுத்த பூங்கொடி, தனது தாய் கண்ணம்மாவுடன் சேர்ந்து மாமியார் ராஜாமணியை கொ லை செய்ததாகவும், பின்னர் ராஜாமணியின் ச டலத்தை வீட்டு தோட்டத்தில் பு தைத்து அதன் மீது செடி வைத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

சிகிச்சை முடிந்து திரும்பிய கணவன் நாகேந்திரனிடம் மாமியாரை கா ணவில்லை என்று பூங்கொடி நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து நாகேந்திரன் பொலிசாரிடம் கூறுகையில், எனது தாயை மாமியாரும், மனைவியும் சேர்ந்து கொ லை செய்தது எனக்கு தெரியாது, செல்வராஜ், வசந்தாமணி கொ லை சம்பவம் கூட எதிர்பாராமல் நடந்தது என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் பூங்கொடியையும் தற்போது கைது செய்துள்ளனர்.