சர்கார் விவகாரம் : வில்லி வரலட்சுமியின் கோபமான பதிவு!!

872

வரலட்சுமி

சர்கார் படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், தற்போது வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயரை ம்யூட் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், குறித்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சர்கார் சர்ச்சை குறித்து அந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், “ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.

எதைச் செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள்” என ட்வீட் செய்துள்ளார்.