சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியை எச்சரித்த போலீசார் : காரணம் என்ன தெரியுமா?

500

நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார்கள் கூறி சர்ச்சை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைனான்சியர் சுப்பிரமணி என்பவரும் அவரது உதவியாளர் கோபி என்பவரும் சேர்ந்து தன்னை நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுததாக போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் சிசிடிவியை ஆஃப் செய்துவிட்டு தாக்கியதாக ஸ்ரீரெட்டி புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விசாரித்ததில் அவர் அளித்தது போலியான புகார் என தெரியவந்துள்ளது.

அந்த இரண்டு நபர்கள் மீதும் நடிகை 3 மாதங்கள் முன்பு ஆந்திராவில் பாலியல் புகார் கூறியுள்ளார். அதன் பேரில் கைதாகி சிறையில் இருந்த அவர்கள் தற்போது வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் தான் ஸ்ரீரெட்டி போலியாக போலீசில் புகார் கூறியுள்ளார். அதனால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.