சாப்பிட பணமில்லை… அதனால் அந்த தொழில் செய்தேன்: நடிகையின் பதில்

682

தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்களின் பெயர்கள் மீது பாலியல் புகார்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.இவர் வெளியிட்டுள்ள பட்டியலில் ஏஆர் முருதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் போன்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பேஸ்புக் லைவில் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ரீரெட்டியிடம், அவர் ஏமாற்றினார், இவர் ஏமாற்றினார் என்று கூறுகிறீர்களே, நீங்கள் ஏன் அவர்களுடன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.அதற்கு அவரோ, தான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிப்பதால் உணவு, வாடகை, பிற செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் படுக்கைக்கு சென்றதாக கூறியுள்ளார்.

இப்படி செய்வதற்கு வேறு வேலை பார்க்கலாமே என்று கேட்டதற்கு, நான் கிளாமர் துறையை சேர்ந்தவள். நான் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. எனக்கு இந்த துறை தான் பிடித்துள்ளது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.